Top

மே‌ட்டூ அணை இ‌ன்று மாலை ‌திற‌ப்பு

July 28, 2010 by sathya 

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இ‌ன்று மாலை ‌திற‌ந்து வை‌க்‌கிறா‌ர்.

மே‌ட்டூ‌ர் அண‌ை‌யி‌ல் இரு‌ந்து ஜூ‌ன் 12ஆ‌ம் த‌ே‌தி த‌ண்‌‌‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படுவது வழ‌க்க‌ம். ஆனா‌ல் இ‌ந்தா‌ண்டு போ‌தி ‌நீ‌ர் இரு‌ப்பு இ‌ல்லாததா‌ல் மே‌‌ட்டூ‌ர் அணையை ‌திற‌ப்பது தாமதமானது.

ப‌ல்வேறு தர‌‌ப்‌‌பின‌ரி‌ன் கோ‌ரி‌க்கையை ஏ‌ற்று ‌இ‌ன்று மாலை 6 ம‌ணி‌க்கு மே‌ட்டூ‌ர் அணை ‌திற‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்‌து‌ள்ளது. இதனா‌ல் டெ‌ல்டா பாசன ‌விவசா‌யிக‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

நே‌ற்று மாலை ‌நிலவர‌ப்படி அணை‌யி‌ன் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் 82.20 அடியாக இரு‌ந்தது. ‌வினாடி‌க்கு 3 ஆ‌யிர‌ம் கனஅடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டி‌க்‌கிறது.

இத‌னிடையே க‌‌ர்நாடக மா‌நில ‌நீ‌ர்‌‌பிடி‌ப்பு பகு‌திக‌ளி‌ல் பெ‌ய்த கன மழை காரணமாக ‌நிர‌ம்‌பி உ‌ள்ள க‌பி‌னி அணை‌யி‌‌ல் இரு‌ந்து ம‌ணி‌க்கு 5 ஆ‌யிர‌ம் கனஅடி ‌நீரு‌ம், ‌கிரு‌ஷ்ணசாக‌ர் அணை‌யி‌ல் இரு‌ந்து ‌வினாடி‌க்கு 1,800 கனஅடி ‌நீரு‌ம் ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த த‌ண்‌ணீ‌ர் இ‌ன்று இரவு மே‌ட்டூ‌ர் அணை‌க்கு வ‌ந்து சேரு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

Comments

Feel free to leave a comment...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!

You must be logged in to post a comment.